ஆரம்பிக்கும் போதே இப்படியா?... ‘அந்தாதூன்’ பட ஷூட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம்...!

Published : Mar 10, 2021, 02:28 PM ISTUpdated : Mar 10, 2021, 03:01 PM IST
ஆரம்பிக்கும் போதே இப்படியா?... ‘அந்தாதூன்’ பட ஷூட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம்...!

சுருக்கம்

நடிகர் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின், நடிக்க உள்ள 'அந்தாதூன்' தமிழ் பட ரீமேக், படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமான நிலையில், முதல் நாளே அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.    

நடிகர் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின், நடிக்க உள்ள 'அந்தாதூன்' தமிழ் பட ரீமேக், படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமான நிலையில், முதல் நாளே அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  

மேலும் செய்திகள்: நம்ம வைகை புயல் வடிவேலுவா இது? கழுத்தில் டை... ஹேண்ட்சம் லுக்கில் யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்!
 

நடிகர் பிரஷாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று,  வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

'அந்தாதூன்' திரைப்படம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படி சுமார் 400 கோடிக்கு மேல்  வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நைட்த்திருந்தனர். மேலும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது ஆயூஷ்மான் குரானாவுக்கும், சிறந்த  இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளையும்  'அந்தாதூன்' அள்ளியது.

மேலும் செய்திகள்: நம்ம வைகை புயல் வடிவேலுவா இது? கழுத்தில் டை... ஹேண்ட்சம் லுக்கில் யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்!
 

தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க பிரஷாந்த் மும்முரமாக கவனம் செலுத்தி வந்தார். இந்த படத்தை ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து இயக்குனர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்த படத்தின் தயாரிப்பாளர், தியாகராஜன் படத்தை இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'அந்தகன்' என பெயரிப்பட்டுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்க பட்ட நிலையில், இவரது பெயர் படக்குழு வெளியிட்ட அறிவிப்பில் வெளியாகாததால், அவரும் விலகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில், பிரசாந்துடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: விக்ரம் - துருவ் நடிக்கும் படத்தின் முக்கிய பிரபலம் திடீர் மாற்றம்! அதிகாரபூர்வமாக வெளியான தகவல்!
 

இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. நீண்ட இடைவெளிக்கு பின், சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் பிரஷாந்த் நடிக்க உள்ளதால்,  ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!