கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார்..! வைரலாகும் புகைப்படம்..!

Published : Mar 10, 2021, 01:27 PM IST
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார்..! வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மோகன் லால் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்து கொண்டுள்ளார். 

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து மார்ச் 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் 60-வயதைக் கடந்தவர்களுக்கும், இணைநோய்கள் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பாரத பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனால் பொதுமக்களும் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை எவ்வித அச்சமும் இன்றி எடுத்து கொள்ள துவங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்: பிரபல முன்னணி ஹீரோவுக்கு கொரோனா தொற்று..! திரையுலகில் அதிர்ச்சி!
 

மேலும், நடிகை குஷ்பு, கமலஹாசன் , எஸ்.வி.சேகர், ஸ்ரீ பிரியா, பழம்பெரும் நடிகை லதா, தொகுக்க தலைவர் ஸ்டாலின் என தொடர்ந்து நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: நம்ம வைகை புயல் வடிவேலுவா இது? கழுத்தில் டை... ஹேண்ட்சம் லுக்கில் யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்!
 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மோகன் லால் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்து கொண்டுள்ளார். இதுபோன்ற முன்னணி நடிகர்கள் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது, மக்கள் மனதில் தடுப்பூசி குறித்து உள்ள பயத்தை நீக்குவது போல் உள்ளது என, நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விவாகரத்துக்கு ஓகே சொன்னாரா நிலா?... கோர்ட்டில் நடந்த செம ட்விஸ்ட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Bigg Boss Season 9 Title Winner : பிக் பாஸ் வெற்றியாளர் யார்? லீக்கான தகவல் - ஷாக் ஆன ரசிகர்கள்