பிரபல முன்னணி ஹீரோவுக்கு கொரோனா தொற்று..! திரையுலகில் அதிர்ச்சி!

Published : Mar 10, 2021, 01:01 PM IST
பிரபல முன்னணி ஹீரோவுக்கு கொரோனா தொற்று..! திரையுலகில் அதிர்ச்சி!

சுருக்கம்

இந்தியாவில் தலைவிரித்தாடிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கடும் முடக்கத்தில் சிக்கித் தவித்த திரையுலகம் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டு படப்பிடிப்பில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா அச்சம், மக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் தணிந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், மக்கள் கூட்டம் மீண்டும் கடை தெரு, மால்ஸ் போன்றவற்றில் அதிகரித்துள்ளதால் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த சமயத்தில் பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருக்கு, தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்ட தகவலை அவரது தாயார் நீது கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனா தாக்கத்தில் இருந்து ரன்வீர் கபூர் மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும், அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிரபல நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!