விக்ரம் - துருவ் நடிக்கும் படத்தின் முக்கிய பிரபலம் திடீர் மாற்றம்! அதிகாரபூர்வமாக வெளியான தகவல்!

By manimegalai aFirst Published Mar 10, 2021, 10:38 AM IST
Highlights

இசையமைப்பாளர் அனிரூத் 'விக்ரம் 60 ' படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அனிரூத்துக்கு பதிலாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாற்றப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'பேட்ட' படத்தை இயக்கியதற்கு பின், சூப்பர் ஸ்டார் மருமகன் தனுஷை வைத்து இயக்கிய 'ஜகமே தந்திரம்' படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

கார்த்தி சுப்புராஜ் இயக்கி வந்த, 'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால், அடுத்த படத்தை தற்போது இயக்க தயாராகி விட்டார். அதன் படி, நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்க உள்ள, கேங் ஸ்டார் படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 

விக்ரமின் 60 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம் வில்லனாகவும், துருவ் நாயகனாகவும் நடிக்கிறார்களாம். தற்போது மத்திய அரசு, ஷூட்டிங் பணிகள் துவங்க அனுமதி கொடுத்துள்ளதால் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளை கார்த்திராஜ் துவங்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த படத்தில், சிம்ரன் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நாயகியாக நடிக்க உள்ளதாகவும், இசையமைப்பாளர் அனிரூத் 'விக்ரம் 60 ' படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அனிரூத்துக்கு பதிலாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாற்றப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன், இதற்க்கு முன் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய 'பிட்சா', 'ஜிகிர்தண்டா' மற்றும் 'இறைவி' ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் நான்காவது முறையாக... 'விக்ரம் 60 ' படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

is "SANTHOSH NARAYANAN MUSICAL" frm now 🥁🥁 Welcome 2 the Gang 🎼🎼

Thnks 4 ur Support&Love 🤗🤗 starts frm TODAY😊

A padam

Need all ur Blessings&Love

More updates 2 follow pic.twitter.com/Y5WFlQSaZP

— Seven Screen Studio (@7screenstudio)

 

click me!