பெண்களின் முகவெட்டு, கண்கள், புருவங்கள், மூக்கு, உதடுகள், கன்னம், மற்றும் தாடை என ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்க வேண்டும் என, பண்டைய கிரேக்கர்களின் சரியான விகிதாச்சாரத்தின் படி கணிக்கப்பட்டதில், உலகில் மிகவும் அழகான 10 பெண்களில் நடிகை தீபிகா படுகோனும் இடம்பிடித்துள்ளார். இந்த முக விகிதாச்சாரத்தையே தமிழர்கள் சாமுத்திரிகா லட்சணம் என கூறுவது உண்டு.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் Jodie Comer, 29 வயதான இவருக்கு உடல் முழுமையையும் அளவிடும் போது, கோல்டன் ரேஷியோவில் 94.52% துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவருடைய கண்கள், புருவங்கள், மூக்கு, உதடுகள், கன்னம், தாடை மற்றும் முக வடிவம் ஆகியவை அளவிடப்பட்டு, பண்டைய கிரேக்கர்களின் சரியான விகிதாசார பண்புக்கூறுகளின் கருத்துக்கு மிக நெருக்கமாக உள்ளது.
இது ஒரு நபரின் தோற்றத்தை மட்டுமே மதிப்பிடுவது. கோல்டன் ரேஷியோ என்பது அழகை அளவிடும் முயற்சியில் கிரேக்கர்களால் முதலில் வடிவமைக்கப்பட்ட ஒரு கணித சமன்பாடு. அதாவது ஒரு முகம் அல்லது ஒருவரின் உடல் விகிதங்கள் 1.618 (Phi) என்ற எண்ணுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ, அவ்வளவு அழகாக இருப்பார்கள் என்பதே அவர்களின் கணிப்பு. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளவர், ஸ்பைடர்மேன், டாம் ஹாலண்டின் காதலியான Zendaya, 26 வயதாகும் இவர், 94.37% பெற்று இரண்டாவது இடத்தையும், மாடல்Bella Hadid, வயது 25, 94.35% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: யாரும் எதிர்பார்க்காத செம்ம ட்விஸ்ட்.? ரகசிய திருமணம் உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
41 வயதான பாடகி Beyoncé 92.44% மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தைப் படித்துள்ளார். Ariana Grande - 91.81% ஐந்தாவது இடத்தையும், Taylor Swift 91.64% ஆறாவது இடத்தையும், Jourdan Dunn - 91.39% ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் இந்த பட்டியலில் பிரபல ஹாலிவுட் மாடலும், தொழிலதிபருமான கிம் கர்தாஷினி 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார். 91.28% மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார்.
மேலும் செய்திகள்: வாடகை தாய் விவகாரத்திற்கு புற்றுப்புள்ளி..! ஆதாரங்களை சமர்ப்பித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் விளக்கம்!
9 ஆவது இடத்தில், பாலிவுட் திரையுலகின் பியூட் குயின் நடிகை பிடித்துள்ளார். 91.22% மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார். மேலும் இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது புருவம் தான் இவரின் மிகப்பெரிய பிளஸ் என குறிப்பிட்டுள்ளனர். இவரது புருவம் கோல்டன் ரேஷியோ மதிப்பீட்டில் 95.6 சதவீதம் ஒற்று போய் உள்ளது. முதலிடம் பிடித்த ஜோடி கமரில் புருவம் கோல்டன் ரேஷியோவில் 89% வீதம் மட்டுமே ஒற்று போய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் HoYeon Jung என்பவர் 89.63% 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.