
இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனாவின் 2வது அலையால் பாதிப்பும், உயிரிழப்புகளும், புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதும், தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் செய்திகள்: ஜெயிச்சுட்டீங்க... சொன்னபடி வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க! வானதி ஸ்ரீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை!
பலர் லேசான அறிகுறியுடன் பாதிக்க பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தாலும், சிலர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று மட்டும்... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நடிகர் பாண்டு மற்றும் ஆட்டோகிராப் படத்தின் மூலம் பிரபலமான கோமகன் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும், கொரோனா தொற்று காரணமாக்க வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: 'ஒருதலை ராகம்' பட தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம் காலமானார்..! டி.ராஜேந்தர் கண்ணீர் மல்க இரங்கல்..!
மேலும் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்து கொண்டிருப்பதாகவும், நாடு மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆண்ட்ரியா இசையமைத்து பாடும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.