
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் செய்ய வசதி இல்லாமல் தாய், தந்தையரை இழந்து தன்னந்தனியாக நின்ற பெண் தான் புஷ்பா. அவரை நகரி தொகுதியின் எம் எல் ஏ வும், ஆந்திரப் பிரதேச சுற்றுலா மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சருமானரோஜா செல்வமணி தத்தெடுத்தார்.
அந்த சிறுமிக்கான கல்வியை, வாழ்நாள் முழுவதுற்குமான படிப்பு செலவை தான் ஏற்பதாக அறிவித்தார். அதன்படி அவருக்குண்டான கல்விச் செலவுகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று படிக்க வைத்தார். அந்த சிறுமி தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்று முதலாமாண்டு MBBS பட்டப் படிப்பில் சேர வாய்ப்பு பெற்றுள்ளார்.
மருத்துவ வசதி இல்லாமல் தன் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக செய்வதே என் லட்சியம் என்று மேடையில் அறிவித்தார். அதைப் பாராட்டி ரோஜா மற்றும் இயக்குநர் RK. செல்வமணி அந்த பெண்ணுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
MBBS படிப்புக்கு உண்டான மொத்த செலவையும் தான் ஏற்பதாக ஏற்கனவே அறிவித்ததை உறுதி செய்து கல்வி கட்டணங்களை கட்டி வாழ்த்து தெரிவித்தார். தத்தெடுத்த பெண்ணாக இருந்தாலும், அவர் என்ன படிக்க விரும்புகிறாரோ அதற்காக அவரை ஊக்குவித்து... அவரது மருத்துவ கனவை நிஜமாகிய ரோஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.