தனது கணவர் ஜெகத் தேசாய் கோவாவில் செட்டிலாகி உள்ள அவர் தனது கர்ப்பகால புகைப்படங்களை அமலா பால் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
2009-ம் ஆண்டு வெளியான நீலத்தாமரா என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அமலா பால். 2010-ல் வெளியான சிந்துசமவெளி படம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் அதே ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் கவனம் பெற்றார். இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. தெய்வ திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், ராட்சசன் என பல படங்களில் நடித்தார்.
இதனிடையே தலைவா படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.எல் . விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஆனால் அவரின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2014-ல் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில், 2017-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தொடர்ந்து பல பிரபலங்களுடன் அமலா பால் இணைத்து பேசப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நவம்பர் 3-ம் தேதி தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைபப்டங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதையுன் இன்ஸ்டாவில் சமீபத்தில் அறிவித்தார். மேலும் தனது கணவர் ஜெகத் தேசாய் கோவாவில் செட்டிலாகி உள்ள அவர் தனது கர்ப்பகால புகைப்படங்களை அமலா பால் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கோவாவில் உள்ள துடிப்பான வெள்ளி சந்தையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இசை, சுவையான உணவு மற்றும் வார இறுதி அலைச்சல் அதிர்வுகளுக்கு மத்தியில் உலாவும் மகிழ்ச்சியாக உள்ளது.. ஆனால் இன்னும் எனது கர்ப்பகால உணவு ஆசைக்காக காத்திருக்கிறேன். பெண்களே, உங்களுடையதை எப்போது பெற்றீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் தனது கணவருடன் ஜாலியாக டான்ஸ் ஆடும் அமலாபால் ஷாப்பிங் செய்தையும், தனது தோழியுடன் விளையாடுவதையும் சாப்பிடுவதையும் பார்க்க முடிகிறது.