பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்.. லோக்கி, ஜீவா மட்டுமில்ல.. கேமியோவில் வருகிறாராம் ஒரு டாப் நடிகர் - யார் அது?

Ansgar R |  
Published : Jan 18, 2024, 04:29 PM IST
பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்.. லோக்கி, ஜீவா மட்டுமில்ல.. கேமியோவில் வருகிறாராம் ஒரு டாப் நடிகர் - யார் அது?

சுருக்கம்

Singapore Saloon : பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வருகின்ற ஜனவரி 25ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். தற்போது அந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜி, பண்பலை வர்ணனையாளராக தனது பயணத்தை துவங்கி இன்று தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஹீரோவாக உருவெடுத்துள்ளார். சென்னையில் பிறந்து தனது துரு துருவென்ற பேச்சால் மக்கள் மத்தியில் தன் குரல் வழியே பிரபலமடைந்த நடிகர் தான் ஆர்.ஜே பாலாஜி. அதன் பிறகு சினிமாவில் தனக்கு கிடைத்த நல்ல நண்பர்களின் உதவியால் அவர் நடிகராகவும் களமிறங்கினார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்னதாகவும் அவர் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் "நானும் ரவுடி தான்" திரைப்படத்தில் "தோஷி பாபா" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு, அந்த ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியது சைமா என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜயகாந்த் இடத்தை விஜய் சேதுபதி Replace செய்துவிட்டார்... அடுத்த கேப்டன் என புகழ்ந்த பிரபல தயாரிப்பாளர்

அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான LKG என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரை உலகில் களமிறங்கினர். அதன்பிறகு "மூக்குத்தி அம்மன்", "வீட்டில் விசேஷங்க" மற்றும் "ரன் பேபி ரன்" உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக 2020 ஆம் ஆண்டு பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி இணை இயக்குனராக பணியாற்றியது பலரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி அவருடைய "சிங்கப்பூர் சலூன்" திரைப்படம் வெளியாகவுள்ளது. பிரபல வேல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கியுள்ள நிலையில் நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இன்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், "சிங்கப்பூர் சலூன்" திரைப்படத்தில் மற்றொரு ஒரு டாப் கோலிவுட் நடிகர் நடித்திருப்பதாகவும், படக்குழு அவர் குறித்த விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் பாலாஜிற்கு மிக நீண்ட நாட்களாக நண்பராக இருக்கும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் கேமியோவில் நடித்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் யார் அந்த நடிகர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

Vishal Help: பொதுமக்கள் வைத்த கோரிக்கை..! கில்லியாக மாறி நிறைவேற்றிய விஷால்... குவியும் வாழ்த்து!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!