
ஆர்.ஆர்.ஆர்.
பாகுபலி 2 படத்தின் வெற்றிக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகர்களாக நடித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து உள்ளார். இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது.
ரூ.500 கோடி வசூல்
பான் இந்தியா படமாக தயாராகி இருந்த இப்படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. இப்படம் முதல் 3 நாட்களில் மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ஆலியா பட்டிற்கு டம்மி ரோல்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக இதில் ஆலியா பட் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
ராஜமவுலிக்கு டோஸ் விட்ட ஆலியா
அதே மனநிலை தான் நடிகை ஆலியா பட்டுக்கு தோன்றி உள்ளது. அவர் படத்தைப் பார்த்து மிகவும் அப்செட் ஆகி போனாராம். ஹீரோயின் என கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக ராஜமவுலி மீது கடும் கோபத்தில் உள்ளாராம் ஆலியா. இதனை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் ராஜமவுலியை அன்பாலோ செய்துள்ள ஆலியா, ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த போஸ்டர்களை நீக்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... Naane varuven : அடுத்த லெவலுக்கு செல்லும் நானே வருவேன்! தனுஷுக்காக வெளிநாட்டு ஹீரோயினை களமிறக்கிய செல்வராகவன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.