“மண்னை மிதித்தவனை கைவிடாது சென்னை”...கொரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு கவிதை மூலம் நம்பிக்கையூட்டிய விவேக்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 16, 2020, 12:38 PM IST
“மண்னை மிதித்தவனை கைவிடாது சென்னை”...கொரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு கவிதை மூலம் நம்பிக்கையூட்டிய விவேக்!

சுருக்கம்

இப்படி கொரோனா வைரஸால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடிவருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நேற்று ஒரே நாளில் மட்டும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 244 ஆக அதிகரித்தது. இதையடுத்து தீயை விட வேகமாக பரவும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கத்துடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மனி வரை பார்சல் சேவையை மட்டுமே வழங்கலாம். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. ரேஷன் கடைகள் கூட காலை 8 மணி முதல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தீயாய் பரவும் கொரோனாவும், மற்றொரு பக்கம் மீண்டும் கடுமையாக்கப்படும் ஊரடங்குகளும் சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

 

இதனால் பீதியடைந்த சென்னைவாசிகள் பலரும் பைக்கிலேயே சொந்த ஊரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். சென்னை சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என தேடி வந்த பலரும், இன்று சென்னையை விட்டு தலைத்தெறிக்க ஓடும் நிலை உருவாகியுள்ளது. லட்சங்களில் சம்பளம், ஆடம்பர வீடு, கார் என அனைத்தையும் விட்டு, விட்டு உயிர் பிழைத்தால் போதும் என ஓட ஆரம்பித்துள்ளனர். இப்படி கொரோனா வைரஸால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வாயை விட்ட அப்பா... வேறு வழியே இல்லாமல் சம்பளத்தை குறைத்த கீர்த்தி சுரேஷ்... எத்தனை சதவீதம் தெரியுமா?

அதில், எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்! பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்! என்று பதிவிட்டுள்ளார். விவேக்கின் நம்பிக்கை கொடுக்கும் இந்த வரிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!