
actor vivek speech இவர் நடிப்பையும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும், மரம் நடுவதன் அவசியம் போன்ற பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றார்.
இந்நிலையில், தற்போது நாட்டையே உலுக்கியுள்ள சம்பவம், பிளாஸ்டிக் அரிசி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை நடிகர் விவேக் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் , நாம் பல வருடங்களாக பிளாஸ்டிக் குப்பைகளை பல இடத்திலும் போட்டு வந்தோம், அதை கால்நடைகள் சாப்பிட்டு உயிர் இழந்தபோது அதை நாம் பெரிதாக கண்டுக்கொள்ள வில்லை. இப்போது நாம் உண்ணும் உணவிலையே பிளாஸ்டிக் அரிசி வந்துவிட்டது.
இது எல்லாரையும் அதிர்ச்சியில் உறையவைக்கும் அளவிற்கு உள்ளது . நாம் நல்லது செய்திருந்தால் நல்லது நடக்கும் நாம் கெட்டது செய்துள்ளோம் அதனால் தான் இப்போது நமக்கு கெட்டது நடக்கிறது.
நம் நாட்டை காக்க இனியாவது விழித்துக்கொள்வோம் என்று நடிகர் விவேக் அதிரடியாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.