
இடையில் கொஞ்சகாலம், விழாக்களில் கலந்து கொண்டாலும் பேசாமலிருந்த இசைஞானி இளையராஜா ஒட்டுமொத்தமாக சேர்த்து நேற்று ’கொட்டோ கொட்டென்று’ கொட்டிவிட்டார்!
நான் இசையமைத்த நாற்பது வருடகாலத்தில் எல்லாமும் நடந்து முடிந்து விட்டது. இனி எல்லா இசைக்கலைஞர்களும் ஒன்றாக உட்கார்ந்து வாத்தியங்களை இசைத்து பாடகர்களை பாடவைத்து ஒலிப்பதிவு செய்வதெல்லாம் சாத்தியமில்லை என்றாகிவிட்டது.
மேனுவலா மியூஸிக் பண்றப்போ எத்தனை எத்தனை உணர்வுகளை, பாவங்களை கொண்டு வருவோம். இப்போ அப்படியா இருக்கு? டியூன்கிற விஷயமே இல்லைனு ஆகிப்போச்சு. மியூஸிசியன்ஸே கிடையாது, மியூஸிக் வாசிக்கிறவங்களும் கிடையாது.
உணர்வுகள், பாவங்கள் இல்லாம வெளிவர்ற இசை திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சுட்டு புருவத்தையும் சேர்த்து மழிச்சது மாதிரி இருக்குது” என்கிற ரீதியில் சூடான வார்த்தைகளை ஃபேஸ்புக் லைவில் அள்ளித் தெளிக்க இளம் இசையமைப்பாளர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்!
‘இளையராஜா மட்டும்தான் இசைக்கு அதிபதி மாதிரி கொண்டாடுறாங்க. நாமெல்லாம் இசையமைக்கலையா? நாம மியூஸிக் பண்ண சாங்ஸ் ஹிட்டடிக்கலையா? இவ்ளோ ஏன்… சமீபமா அவர் இசையமைச்சதுல எந்தப் பாட்டாவது வைரல் ஹிட்டாயிருக்கா?’ என சமீபத்தில் ஒரு இளம் இசையமைப்பாளர் மப்பும் மந்தாரமான பொழுதில் ஆதங்கப்பட அந்த செய்தி இசைஞானியின் காதுக்கு எட்டியதாலேயே நேற்றைய காரசார விமர்சனம் என்கிறார்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.