
சென்னையில் 100 டிகிரிக்கும் மேல் கோடை வெய்யில் மக்களை வாட்டி வதக்கி வருகிறது. எப்போதும் கோடை வெய்யிலின் போது மக்களை கவர்வதற்காக அரசியல் தலைவர்கள் சிலர் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போடுவது வழக்கம்.
ஆனால் தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சி இருகட்சியாக சிதறிப்போய் கிடக்கிறது, மற்ற கட்சிகள் இந்த இரு கட்சிகளை குறை மட்டும் தான் கூறி வருகின்றனரே தவிர, மக்கள் நலனில் எந்த அக்கறையும் காட்டவில்லை.
இந்நிலையில், சமூக அக்கறையோடு அப்துல் கலாமின் வழியை பின்பற்றி மரக்கன்றுகளை நட்டு வரும் விவேக், தற்போது அவரது வீட்டின் அருகே மோர் பந்தல் போட்டுள்ளார்.
அப்துல் காலம் பெயரில் ஆரம்பிக்கபட்டுள்ளதால் இந்த மோர் பந்தல் குறித்து அவர் கூறுகையில், சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் உடலுக்கு தீங்கு விளைவிற்கும் அந்நிய நாட்டு குளிர்பானங்களை நாடி செல்வதை தவிர்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இதனை ஆரம்பித்துள்ளதாகவும்,
மேலும் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.