திரை ஆளுமை வினுசக்கரவர்த்தி சார் 'சிம்ப்ளி சூப்பர்ப்' சிலாகித்த சியான்  விக்ரம்!

First Published Apr 30, 2017, 1:02 PM IST
Highlights
Chiyan Vikram says vinu chakravarthy sir simply superb


மிக அருமையான திரை ஆளுமை வினுசக்கரவர்த்தி. வில்லனாக மட்டுமில்லை குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியவர். ரஜினி, விஜய்காந்த், கார்த்திக், பிரபு என்று சூப்பர் சீனியர் நடிகர்களின் படங்களில் மட்டுமல்ல அஜித், விக்ரம் என்று சீனியர் ஸ்டார்களின் படங்களிலும் தன் பங்கை நச்சென்று பதித்தவர். 

இவர்களுடன் குறைவான படங்களே செய்திருந்தாலும் அதை நிறைவாக செய்தவர். விக்ரமுடன் வினுசக்கரவர்த்தி நடித்த ‘காசி’ மறக்க முடியாத படைப்பு. இதில் விக்ரம் பார்வையற்றவராக நடிக்க, வினுவோ நடக்க இயலாதவராக படுத்தே கிடக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரீமேக் என்றாலும் கூட தமிழ் சினிமாவில் மைல் ஸ்டோனாக அமைந்தது இந்த படம். 

வினுசக்கரவர்த்தி சமீபத்தில் இறந்துவிட, அவரது நினைவுகளை அசைபோட்டிருக்கும் கென்னி ‘’வினு சார் சிம்ப்ளி சூப்பர்ப். காசி படத்துல எனக்கு கண் தெரியாத கேரக்டர். வெறும் கண்கள்ள மட்டுமே அதை காட்டாம நடக்குறது, பேசுறது, பாடுறதுன்னு எல்லா செயல்கள்ளேயுமே நான் பார்வையில்லாதவன் அப்படிங்கிறதை வெளிப்படுத்த வாய்ப்பு இருந்துச்சு. 

ஆனா அவருக்கோ படுத்தே கிடக்கிற திமிரான அப்பா கேரக்டர். அவர் முகத்துக்கு க்ளோசப் ஃபிரேம் மட்டுமே வெச்சு, கதையை நகர்த்த வேண்டிய சூழல். வைடு ஃப்ரேம்ல பெருசா அவருக்கு வேலை இல்லை. அப்படியொரு இறுக்கமான பொசிஷன்லேயும் வெரைட்டியான முக பாவனை மூலமாகவே கலக்கிட்டார் சார். 

டப்பிங்லேயும் டயலாக்ல செம மாடுலேஷன்  கொடுத்து கலக்கிட்டார். வெறும் க்ளோசப் ஃப்ரேம்ல வினு சார் எப்படித்தான் மேனேஜ் பண்றார்னு நான் ஷூட்டிங்ல கவனிச்சிருக்கேன். ஆனா அமர்க்களப்படுத்திட்டார். மோசமான குணமுடைய அப்பாங்கிறதை அவரது கண்கள் கூட நடிச்சு வெளிப்படுத்துச்சு. ஐ மிஸ் ஹிம்!” என்று சிலாகித்திருக்கிறார். 
 

click me!