3 மத முறையில் வழிபாடு செய்து... 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால்!

By manimegalai a  |  First Published Nov 6, 2022, 3:47 PM IST

நடிகர் விஷால், 11 ஏழை ஜோடிகளுக்கு இன்று காலை தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். இவரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
 


தமிழ் திரையுலகில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் விஷால், இன்று காலை சுமார் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணம் சென்னையை அடுத்துள்ள மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தை சேர்ந்த , மனோ பாலா, பூச்சி முருகன், ரமணா, நந்தா, சௌந்தர ராஜன் போன்ற பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

நடிகர் விஷால், திருமணம் நடைபெற உள்ள மேடைக்கு வருகை தந்ததும், அவருக்கு புரோகிதர்கள் மரியாதை செய்து... 11 ஜோடிகளுக்கு கட்டப்பட உள்ள மாங்கல்யத்தை கொடுத்ததும், இந்து, கிறிஸ்டியன், மற்றும் முஸீம் என மூன்று மத வழக்கப்படியும் வழிபாடு செய்து... பின்னர் திருமண ஜோடிகளுக்கு தன்னுடைய கரங்களாலேயே தாலி எடுத்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்தார் விஷால். பின்னர் அனைத்து ஜோடிகளும், விஷால் உட்பட பெரியவர்கள், குடும்பத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

Tap to resize

Latest Videos

மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!

விஷால் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த கையேடு... சுமார் 51 பொருட்கள் அடங்கிய குடும்பத்திற்கு மிகவும் தேவையான 51 சீர் வரிசை பொருட்களையும் வழங்கியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை விஷால் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் மாத்தூர் பகுதிக்கு வந்தபோது, ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பை கொடுத்தனர். இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Alia Bhatt: ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! குவியும் வாழ்த்து..!

தன்னுடைய பிறந்தநாள், பெற்றோர் பிறந்தநாள் போன்ற சிறப்பான நாட்களில்... பல்வேறு நலஉதவிகளை செய்து வரும் விஷால், தற்போது ஏழை ஜோடிகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். அதே போல் தன்னுடைய அம்மாவில் பெயரில் விஷால் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு..! கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
 

click me!