பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட ‘குந்தவை’ திரிஷா... வைரலாகும் வீடியோ

Published : Nov 06, 2022, 02:26 PM IST
பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட ‘குந்தவை’ திரிஷா... வைரலாகும் வீடியோ

சுருக்கம்

சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை திரிஷா, சக நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

96 படத்துக்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் திணறி வந்த நடிகை திரிஷா, மணிரத்ரனத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்ற திரிஷாவுக்கு தற்போது கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவும் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... ‘லால் சலாம்’ படத்துக்கு முன் இத்தனை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினிகாந்த்? - முழு லிஸ்ட் இதோ

இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை தட்டித்தூக்கி வரும் நடிகை திரிஷா, சமீபத்தில் வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து வந்ததும் அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது.

ஆனால் வலியையும் பொருட்படுத்தாமல் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட திரிஷா, அங்கு தன்னுடன் படத்தில் பணியாற்றியவர்களுடன் ஜாலியாக நடனமாடி மகிழ்ந்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குந்தவை திரிஷாவின் டான்ஸ் தான் தற்போது டிரெண்டிங்கிலும் உள்ளது.

இதையும் படியுங்கள்... இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளேன்... திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பின் யோகிபாபு சொன்ன குட் நியூஸ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்