ஆறுதல் கூற செல்வதற்கே இவ்ளோ அலப்பறையா.. காரின் மேலே அமர்ந்து சென்ற பவன் கல்யாண் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Published : Nov 06, 2022, 11:07 AM IST
ஆறுதல் கூற செல்வதற்கே இவ்ளோ அலப்பறையா.. காரின் மேலே அமர்ந்து சென்ற பவன் கல்யாண் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

சுருக்கம்

நடிகர் பவன் கல்யாண், காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வரும் இவர், அக்கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். பொதுவாக தெலுங்கு படங்களில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் பெரும்பாலும் கிரிஞ்சாக தான் இருக்கும்.

அதனை ட்ரோல் செய்து ஏராளமான மீம்ஸ்களும் போடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் பவன் கல்யாண், காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வந்தது. அது ஏதோ படத்தின் ஷூட்டிங் என நினைத்து அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... ‘லால் சலாம்’ படத்துக்கு முன் இத்தனை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினிகாந்த்? - முழு லிஸ்ட் இதோ

ஆனால் உண்மையில் அது ஷூட்டிங் வீடியோ இல்லையாம், நிஜமாகவே அவ்வாறு சென்றுள்ளார் பவன் கல்யாண். ஆந்திர மாநிலத்தில் உள்ள இப்டம் எனும் கிராமத்தில் உள்ள வீடுகள் சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்டன. இதில் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகத் தான் அவ்வாறு காரில் சென்றுள்ளார் பவன் கல்யாண்.

இதை அறிந்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு கட்சியின் தலைவனே இதுபோன்று சாலை விதிகளை மீறலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ ‘இப்படி போய் ஆறுதல் கூறுவதற்கு பதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டியது தானே’ என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் முன்னாடியேவா... ரச்சிதாவுக்கு நூல்விட்டு மாட்டிக்கொண்ட ராபர்ட் மாஸ்டர் - கலகப்பான புரோமோ இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்