varisu first single : சின்ன மியூசிக்கல் சம்பவம் உங்களுக்காக..வாரிசு இயக்குனரின் பெருமிதம்

முன்னதாக வெற்றி பெற்ற அரபிக் குத்து படமாக்கப்பட்ட அதே இடத்தில் வாரிசு படத்தின்  இந்த பாடலை உருவாக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதை அடுத்து சென்னையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.


பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன. வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தின் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு அறிமுகம் ஆகிறார் விஜய். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும். இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா நாயகியாகவும், சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் நடிக்கின்றனர். 

முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகும். இதில் 90களின் விஜயை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என அடுத்தடுத்து நடைபெற்ற படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. அதோடு வாரிசு படத்தின் மூன்று லுக்குகளும் விஜயின் பிறந்த நாளை ஒட்டி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து படப்பிடிப்பிலிருந்து நடிகர்களின் புகைப்படங்களும் வெளியாகத் துவங்கியது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...Kiara Advani : கியாரா அத்வானி வலை போன்ற மெல்லிய உடையில் மனதை கவர்ந்துள்ளார்...

இதற்கிடையே வாரிசு படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் குறித்த புரோமோ முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இதைத்தொடர்ந்து தற்போது ரஞ்சிதமே என்னும் லிரிக்கல் சாங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. விஜய் படத்தில் முதல் முறையாக இசையமைத்துள்ள தமன் இசையில், விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தளபதி விஜயும்  எம்.எம். மானசி  பாடியுள்ளனர்.

முன்னதாக வெற்றி பெற்ற அரபிக் குத்து படமாக்கப்பட்ட அதே இடத்தில் வாரிசு படத்தின்  இந்த பாடலை உருவாக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதை அடுத்து சென்னையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் ரஞ்சிதமே பாடல் குறித்த பதிவிட்டுள்ள இசை அமைப்பாளர் தமன், அண்ணா நான் இதிலிருந்து உங்கள் மகத்தான ரசிகனாக மாறியுள்ளேன். மாஸ் அண்ணா. எங்களுடைய சின்ன மியூசிக்கல் சம்பவம் உங்களுக்காக. லவ் யூ டியர் அண்ணா என பதிவிட்டுள்ளார்

 

the Day I have Been Waiting Since I Became Ur Hugest FAN 🔥

Neengaa Massss Anna 🖤

Yengallodda Chinna Musical Sambhavam Ungallukagha Love U dear anna ❤️

Is here 🔊🔥 Volume Up ⬆️ Speakers ON https://t.co/Bwv8VgeVbo

— thaman S (@MusicThaman)

 

click me!