
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த 2012 ஆம் ஆண்டு, தன்னுடைய காதல் கணவர் தனுஷை நாயகனாக வைத்து 3 படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெட்ரா நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்திற்கும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காத நிலையில், தற்போது தன்னுடைய மூன்றாவது படத்திற்கு பூஜை போட்டுள்ளார்.
கணவர் தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த பின்னர், மீண்டும் திரைப்படம் இயக்குவதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த துவங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை, இவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்க உள்ள, 'லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே இந்த படத்தின் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படம் என்றும் இந்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதர்வா இந்த படத்தில் நடிக்க வில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க, கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதை என்பதால்... இந்த படத்தில் நன்கு கிரிக்கெட் விளையாட தெரிந்த, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்து, அதர்வாதை இந்த படத்தில் இருந்து தூக்கியதாக கூறப்படுகிறது. மேலும், 'லால் சலாம்' படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இவர் வரும் காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இருக்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
மிக பிரமாண்டமாக, அதிக பொருட்செலவில் உருவாக உள்ள இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.