பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் எது சொன்னாலும் கோவப்பட்டு கத்திய தனலட்சுமியை நிற்க வைத்து கமல் வெளுத்து வாங்கிய புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 27 நாட்களை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரம் முழுவதும்... தேவை இல்லாமல் போட்டியாளர்கள் சண்டை போட்டது நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு சலிப்பை வரவைத்துள்ளது. தேவை இல்லாமல் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, தனலட்சுமி சண்டை போடுவதாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் தேவை இல்லாமல் தனலட்சுமி பிரச்சனை செய்கிறார் என்று வெளிப்படையாக கூறியதையும் பார்க்க முடிந்தது.
இது குறித்து, தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... தனலட்சுமியை நிற்க வைத்து, கமல் கேள்வி கேட்டுள்ளார். அதாவது போட்டியாளர்கள் உங்களிடம் ஒரு கருத்தை கூறுவதற்கு கூட தயக்கம் காட்டுகிறார்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா என கேட்பதோடு? யார் என்ன சொன்னாலும் அதெல்லாம் நீங்க சொல்ல கூடாது என சண்டைக்கு செல்கிறீர்கள் என கூறி வெளுத்து வாங்கியுள்ளார். எனவே இனியாவது, தனலட்சுமி... சரியான விஷயத்திற்காக மட்டுமே சண்டை போடுவாரா? அல்லது கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக கண்டமேனிக்கு கத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் இந்த வாரம், நாமினேஷன் லிஸ்டில்.. விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, மற்றும் செரீனா ஆகிய 5 போட்டியாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களில் மிகவும் குறைவான வாக்குகளுடன், செரீனா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்குகள் சுவாரஸ்யமாக இல்லாத காரணத்தால், வரும் வாரம், சண்டைகளுக்கு... பிரச்சனைகளுக்கும் குறைவில்லாத டாக்ஸுகளை பிக்பாஸ் கொடுத்து, எதிர்பாராத பல சம்பவங்களை அரங்கேற்ற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.