மாஸ் என்ட்ரி கொடுத்த "விஜயின் வில்லன்".. SK 23 படக்குழு வெளியிட்ட மரண மாஸ் வீடியோ - ARM ஆட்டம் ஆரம்பம்!

Ansgar R |  
Published : Jun 09, 2024, 07:01 PM IST
மாஸ் என்ட்ரி கொடுத்த "விஜயின் வில்லன்".. SK 23 படக்குழு வெளியிட்ட மரண மாஸ் வீடியோ - ARM ஆட்டம் ஆரம்பம்!

சுருக்கம்

SK 23 New Update : முதல் முறையாக பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். 

மிமிக்ரி கலைஞராக பல ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று, அதன் பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தான் பங்கேற்ற நிகழ்ச்சியில் சாம்பியனாக பட்டம் பெற்று, அதன்பின் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்த திருச்சியை சேர்ந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் திரைப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இப்பட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?

தமிழ் மொழியில் மெகா ஹிட் திரைப்படங்கள் பலவற்றை இயக்கி புகழ்பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த இயக்குனர் தான் முருகதாஸ். கடந்த 2001 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "தீனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் தான் ரமணா. 

இன்றளவும் அந்த திரைப்படம் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. இறுதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "தர்பார்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியதோடு பெரிய ஓய்வை எடுத்து வந்த ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் தனது களத்தில் இறங்கி தற்போது சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகின்றார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால் களமிறங்கியுள்ளதை, ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு SK 23 பட குழு அசத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Krithi Shetty : முத்துமணி அணிந்து நிற்கும் பேரழகி.. கண்களால் கைது செய்யும் கீர்த்தி ஷெட்டி - கூல் பிக்ஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!