"சம்பளம் வாங்கிட்டேன் அது போதும்".. தயாரிப்பாளரிடம் கண்டிஷனாக NO சொன்ன தளபதி விஜய் - எதற்கு தெரியுமா?

By Ansgar R  |  First Published Oct 20, 2023, 9:59 PM IST

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் முதல் நாளில், உலகளவில் சுமார் 148 கோடி ரூபாய் என்று மாபெரும் வசூலை பெற்றுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்திய சினிமா வரலாற்றில், வெளியான முதல் நாளில், உலக அளவில் ஒரு திரைப்படம் சுமார் 148 கோடி ரூபாய் வசூல் செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் அவர்கள் பேசும்பொழுது, "தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டாது" என்கின்ற ஒரு தகவலை தெரிவித்துள்ளார். காரணம் ஹிந்தி மார்க்கெட்டில் இருந்து நாங்கள் பெரிய அளவில் வசூலை எதிர்பார்க்கவில்லை என்றும், இதனால் லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டுவது சாத்தியமல்ல என்றும் அவரே தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

Tamannaah Bhatia: டக்குனு பார்த்ததும் பக்குனு ஆகிடுச்சு! ஸ்கின் கலர் உடையில் ரசிகர்களை ஜர்க் ஆக்கிய தமன்னா!

மேலும் இந்த திரைப்படத்தின் போது தனக்கு தளபதி விஜய் அவர்களுடன் ஏற்பட்ட பல அழகிய நிகழ்வுகள் குறித்து அவர் பகிர்ந்து உள்ளார். குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தின் போது தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு பரிசினை வழங்க முடிவு செய்து இருந்தேன் என்றும், ஆனால் அதை தெரிந்து கொண்ட தளபதி விஜய் அவர்கள், என்னை அழைத்து "எனக்கு நீ சம்பளம் கொடுத்து விட்டாய் அல்லவா", பிறகு இதெல்லாம் எதற்கு? எனக்கு எந்த விதமான பரிசு பொருட்களும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

அதே போல லியோ திரைப்படத்தை தமிழகத்தில் 4 மணி காட்சிகளை ஒளிபரப்ப நாங்கள் எவ்வளவோ முயன்றோம். இருப்பினும் அது எங்களால் முடியவில்லை இதை பற்றி செய்திகள் மூலம் அறிந்த தளபதி விஜய் அவர்கள், எனக்கு அலைபேசி மூலம் அழைத்து "நான்கு மணி காட்சிகளுக்காக நீ நீதிமன்றம் சென்றிருக்கிறாயா? எதற்கு போனாய்" என்று என்னிடம் கடிந்து கொண்டார். 

அரசு சொல்வதை மீறி நாம் செயல்பட கூடாது என்றும் அவர் என்னிடம் கூறினார். பிற மாநிலங்களிலும் 4 மணி காட்சிகள் இடம் பெறவில்லை என்றால் பரவாயில்லை என்று அவர் கூறிய நிலையில், தமிழகம் தவிர பிற பல இந்திய மாநிலங்களில் 4 மணி காட்சிகள் நல்லமுறையில் ஒளிபரப்பானது, என்றார் அவர்.

Sunaina: அச்சச்சோ நடிகை சுனைனாவுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. வைரலாகும் புகைப்படம்!

click me!