
நடிகர் விஜயகாந்துக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து, வென்டிலேட்டர் மூலம் கேப்டனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
விஜயகாந்தின் மரணம் குறித்து அறிந்த, தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தேமுதிக கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். தற்போது இவருடைய உடல், தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில்... ஆயிரக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும், வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீசாரும் கட்சி அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு... அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளையும் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதேபோல் சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்களுடைய அஞ்சலியை சமூக வலைதளம் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது... "அண்ணன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்கிற செய்து கேட்டு மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழந்த அபூர்வ கலைஞன் அவர்கள். கடைக்கோடி மக்கள் வரைக்கும் எல்லோருக்கும், எல்லாம் உதவிகளும் செய்து... புரட்சி கலைஞராக வாழ்ந்து நம் மனதில் இடம்பிடித்தவர். அண்ணன் விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன். அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என சூர்யா தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! என தெரிவித்துள்ளார். விஜயகாந்துடன் சூர்யா பெரியண்ணா படத்தில் நடித்துள்ளார். அதே போல் சூர்யாவின் மாயாவி படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.