
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். சிறுவயது முதலிலேயே தனது குடும்பத்தை போல இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த பிரேம்ஜி அமரன், வெளிநாடுகளுக்கு சென்று இசைப் பயிற்சியை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். குறிப்பாக வல்லவன் திரைப்படத்தில் வரும் "லூசு பெண்ணே", சென்னை 28 படத்தில் வரும் "ஜல்சா", கோவா திரைப்படத்தில் வரும் "கோவா தீம்" பாடல், தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் வரும் "விளையாடு மங்காத்தா" என்கின்ற பாடல் இப்படி பல பாடல்களை ரீமிக்ஸ் செய்து அசத்திய மாபெரும் இசைக்கலைஞர் தான் பிரேம்ஜி அமரன்.
பாடகராகவும், பல திரைப்படங்களில் இவர் பாடல்களை பாடி இருக்கிறார் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான "ஞாபகம் வருதே" என்கின்ற திரைப்படம் தான் இவருடைய இசையில் வெளியான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "மன்மத லீலை" என்கின்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இவருடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஒரு சிறந்த கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் பிரேம்ஜி அமரன், இறுதியாக இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான "சத்திய சோதனை" என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
45 வயதை கடந்து பேச்சிலராக வாழ்ந்து வந்த பிரேம்ஜி அமரனுக்கு வருகின்ற ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அது குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. அவருடைய திருமண அழைப்பிதழ் தான் இப்பொழுது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்து என்கின்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.