
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கதாநாயகன், பாடகர், நடன இயக்குனர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சிம்பு இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவர் மத்தியிலும் கேக் வெட்டியது மட்டும் இன்றி, தன்னுடைய ரசிகர்களையும் சந்தித்தார்.
அதே போல் பிரபலங்கள் பலர் சிம்புவிற்கு, சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை மழையாய் பொழிந்து வருகிறார்கள்.
கடந்த வருடம் சிம்பு நடிப்பில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் '90 எம்எல்' ஆகிய படங்கள் மட்டுமே வெளியானது, இதில் சிம்பு நாயகனாக நடித்த, 'வந்த ராஜாவாதான் வருவேன்' ப்டுதோல்வியை சந்தித்தது குறிப்பித்தக்கது.
இந்த வருடத்தில், இவர் நடிப்பில் மஹா, திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே போல் மாநாடு படத்தையும் சிம்பு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் சிம்பு அடுத்த வருட பிறந்தநாளை அவரின் மனைவியோடு கொண்டாட வேண்டும் என்பது பலருடைய விருப்பமாகவும்... வாழ்த்தாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.