
உலக மக்களை அச்சுறுத்தும் ஒரே வார்த்தையாக கொரோனா மாறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அமெரிக்கா, வளைகுடா நாடுகளை கடந்து இந்தியாவிற்குள் புகுந்துள்ளது. கேரளாவில் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஓவியா, தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனோ வைரஸ் தாக்குதல் குறித்து அக்கறையாக பதிவிட்டுள்ளார். அதில் இந்த நோய் விரைவில் நீங்கி விடும், உலகம் மீண்டும் பாதுகாப்பான நிலைக்கு திரும்பும், தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இளைத்து போன தேகம், களைத்துப்போன முகம்... கீர்த்தி சுரேஷுக்கு என்னாச்சு..? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!
கொரோனோ வைரஸ் தாக்குதல் மக்கள் மனதில் மரண பயத்தை கொண்டு வந்துள்ள நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக நடிகை ட்வீட் போட்ட ஓவியா, அவசரத்தில் நோய்க்கு ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங்கை தப்பா போட்டுட்டாராம். இதை ஒரு தப்புன்னு ரசிகர் ஒருவர் ஓவியாவின் ட்வீட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி, கமெண்ட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: குட்டி பாப்பா முதல் அம்மா ஆனது வரை... நடிகை எமி ஜாக்சனின் சூப்பர் கிளிக்ஸ்...!
இதனால் செம்ம கடுப்பான ஓவியா, உங்கள மாதிரியான ஆட்கள் எழுத்துப்பிழைக்காக கவலைப்படுறீங்க... நோய்க்காக(Decease) இல்ல... சாரி Disease என நெத்தியடி பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.