
தற்போது 44 வயதாகும் பிரபல நடிகர் சித்தார்த், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே அவருடைய குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில், அவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் தொடர்ந்தார். அதன் பிறகு டெல்லியில் தனது பட்டப் படிப்பையும் முடித்தார். அப்போது தான் டெல்லியில் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த மேகனா என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.
இந்த ஜோடிக்கு கடந்த 2003ஆம் ஆண்டு திருமணமும் நடைபெற்ற முடிந்தது, இருப்பினும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த ஜோடி விவாகரத்து பெற்றனர். அன்று தொடங்கி சிங்கிளாகவே வாழ்ந்து வந்த சித்தார்த். கடந்த 2021ம் ஆண்டு வெளியான "மகா சமுத்திரம்" என்கின்ற தெலுங்கு திரைப்படத்தில் தன்னோடு நடித்த பிரபல நடிகை அதிதி ராவ் அவர்களை டேட்டிங் செய்ய தொடங்கினார்.
ஆடுஜீவிதம் படத்தில் ஆட்டுடன் செக்ஸ் வைக்கும் காட்சி எடுக்கப்பட்டதா? இயக்குனர் பிளெஸ்ஸி ஓபன் டாக்..
சுமார் மூன்று ஆண்டுகால காதலுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி இந்த ஜோடி தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். நடிகர் சித்தார்த் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். அதேபோல அதிதி ராவ் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
தற்பொழுது சில மாதங்களுக்கு முன்பு அதிதி ராவ், அப்போது பெரிய அளவில் ஹிட்டான "மனசோ இப்போ தந்தியடிக்கிது" என்ற தமிழ் பாடலுக்கு தனது காதலர் சித்தார்த் அவர்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ தற்பொழுது மீண்டும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
Nabha Natesh: நடிகர் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் இணைந்தார் நடிகை நபா நடேஷ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.