ராணுவத்தைத்தான் மக்கள் நம்புறாங்க… உங்களை இல்ல…..மோடிக்கு ஷாக் கொடுத்த நடிகர் சித்தார்த் !!

By Selvanayagam PFirst Published Mar 4, 2019, 8:36 PM IST
Highlights

இந்திய மக்கள் பாதுகாப்புப் படையைத் தான் நம்புகிறார்கள்.. உங்களை அல்ல என்று பிரதமர் மோடியைத் தாக்கி நடிகர் சித்தார்த் கருத்துத் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் ஒழிக்கும் விதமாக இந்திய விமானப் படை அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டது. விமானப் படையின் இந்த செயலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், பாராட்டுத் தெரிவித்தனர்.

ஆனால் சர்வதேச செய்திகளில்  முகாம்கள் தாக்கப்பட்டது உண்மைதான் ஆனால் தீவிரவாதிகள் கொல்லப்படவில்லை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த தாக்குலுக்கு ஆதாரம் இருக்கிறதா ? எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கடுப்பான பிரதமர் மோடி பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர்.

இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே குரலில் பேச வேண்டும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்த விமானப்படையினரின் துணிச்சலான செயலுக்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள். 

பயங்கரவாத சவாலை எதிர்த்து  போரிட்டுக் கொண்டிருக்கிற பாதுகாப்பு படைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, படை வீரர்களின் மன உறுதியைக் குலைக்கிற விதத்தில் நடந்து கொள்கின்றனர் என மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
.
எல்லை தாண்டியும், இந்தியாவுக்குள்ளும் நமது பாதுகாப்பு படையினர், எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், பாகிஸ்தானை மகிழ்விப்பதற்காக எதிர்க்கட்சிகள் கருத்துகளை வெளியிடுகின்றனர் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.


 
இது குறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய மக்கள் பாதுகாப்புப் படையைதான் நம்புகிறார்கள், உங்களை இல்லை என கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார்.

இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். 

உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார். 

click me!