
ரிலீஸாகி இன்னும் முதல்வாரத்தைக்கூட கடக்காத நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நடிகை ஓவியாவின் ‘90 எம்.எல்’ படம் மிக விரைவில் ’இதி சால தக்குவா’ என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸாகவுள்ளது.
படம் நெடுக ஒருவர் உதட்டை மற்றவர் கவ்வும் லிப் லாக் காட்சிகள், ஓவியா தொடங்கி அவரது தோழிகள் அனைவரும் கஞ்சா புகைக்கும் காட்சிகள், ஒன்லி இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஆபாச வசனங்களுடன் ரிலீஸாகியிருக்கும் ஓவியாவின் ‘90 எம்.எல்’ படம் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுமார் 4கோடி முதல் 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் முதல் நாள் வசூலை வைத்துக் கணக்கிட்டபோது ரூ. 15 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் குறித்து பாஸிடிவான கருத்துக்களை விட நெகட்டிவான கருத்துக்கள் அதிகம் பரவியதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் இறங்குமுகமானது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரைட்ஸ் விலைபோயிருக்கிறது. இதன் டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருவதாகவும் படத்திற்கு ‘இதி சால தக்குவா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் படம் இன்னும் ஓரிரு வாரங்களில் ரீலீஸ் ஆகவிருப்பதாகவும் தெரிகிறது. ஆக ஆந்திரா, தெலுங்கானாவிலும் சரக்கு, தம் அடிக்கத் தயாராகிவிட்டார் நம்ம ஓவியா.
என்ன காரணத்தாலோ தமிழ்ப்படத்தில் தனது பெயரை மறைத்து அழகிய அசுரா என்ற பெயரில் இயக்கிய பெண்ணியவாதி இயக்குநர் தெலுங்கு விளம்பரங்களில் அனிதா உதீப் என்ற தனது ஒரிஜினல் பெயரிலேயே விளம்பரங்களில் இடம்பெறுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.