
மி டு சர்ச்சைகள் குறித்து அதிகம் பேசி, சில தினங்களுக்கு இந்தித்திரையுலகின் பரபரப்பான நடிகையாக இருந்து வந்த தனுஸ்ரீ தத்தா, குறும்படம் என்ற பெயரில் பாலிவுட் வட்டாரத்தில் ஒரு பெரும் நெருப்பை பற்றவைக்கத் தயாராகிவிட்டார்.
இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ‘மீ டூ’வில் சிக்கி இந்தியப்பட உலகை அதிர வைத்தனர். வில்லன் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக் இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் மீ டூவில் சிக்கினர். மிடு சர்ச்சைகளால் பல படங்கள் கைவிடப்பட்டன.
நடிகை கங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் விகாஸ் பாஹல் மீது பாலியல் புகார் கூறினார். மாதுரி தீட்சித், ஜுஹு சாவ்லா ஆகியோரை வைத்து ‘குலாப் கேங்’ படத்தை இயக்கிய சவுமிக் சென் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகை ஒருவர் கூறினார். தொடர்ந்து மூன்று பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர். பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் விருந்து நிகழ்ச்சியில், மதுவில் போதை பொருளை கலந்து தன்னை சீரழித்தாக பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா குற்றம் சாட்டினார்.
இப்படி மீடூ-வில் சொல்லப்பட்ட பாலியல் புகார்களை வைத்து ஒரு டஜன் படங்களாவது எடுத்துவிடமுடியும் என்கிற நிலையில், துவக்கப்புள்ளியாக, தனுஸ்ரீதத்தா மிடு பஞ்சாயத்துகளை மய்யமாக வைத்துக் குறும்படம் ஒன்றை எடுத்துள்ளார். இதற்கு ‘கார்டியன் ஏஞ்சல்’ என்று பெயரிட்டுள்ளார். “பட வாய்ப்பு தேடும் நடிகைகள் எப்படி பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன். இந்த குறும்படம் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்” என்று தனுஸ்ரீ இப்போதைக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டுமே வெளியிட்டுள்ள நிலையில் பாலிவுட் காதல் மன்னன்கள் பலரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.