பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள திரைப்படம் தான் காஞ்ஜூரிங் கண்ணப்பன் என்கின்ற திரைப்படம்.
மறைந்த பிரபல நடிகரும், திரைப்பட கதாசிரியருமான கிரேசி மோகன் அவர்களுடைய நாடகங்களில் நடிக்க துவங்கி, அதன்பிறகு சினிமா துறையில் களமிறங்கிய நடிகர் தான் சதீஷ். கடந்த 2006 ஆம் ஆண்டு கிரேசி மோகனுடைய திரைக்கதையில் வெளியான "ஜெர்ரி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சதிஷ்.
இவருக்கு ஒரு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது 2010 ஆம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான "தமிழ் படம்" என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆர்யாவின் மதராசபட்டினம், சிவகார்த்திகேயனின் மரினா, ஆரியின் "மாலை பொழுதின் மயக்கத்திலே", விக்ரமின் "தாண்டவம்" போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
போராட்ட களத்தில் கைலியுடன் ரத்த சொட்ட சொட்ட நிற்கும் ஜீ.வி-யின் 'ரெபல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
குறிப்பாக பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த எதிர்நீச்சல் மாற்றும் மான் கராத்தே உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டானதையடுத்து, 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இவர் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
இந்நிலையில் முதல் முறையாக "வித்தைக்காரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக களம் இறங்கிய சதீஷ், தற்பொழுது மீண்டும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் "காஞ்ஜூரிங் கண்ணப்பன்" என்கின்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக இவர் நடிக்கவுள்ளார்.
Being a Lead in a Bro musical is a for every hero and it’s mine too. Proud to be associated with bro in ❤️
Thank u so much … pic.twitter.com/bQFu1Sd1KF
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தற்பொழுது இந்த கதைக்குள் வந்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் இளைய இசை ஞானி யுவன் சங்கர் ராஜா அவர்கள். இதுகுறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ள நடிகர் சதீஷ் அவர்கள் "ஒவ்வொரு ஹீரோவிற்கும் யுவனுடைய இசையில் நடிப்பது என்பது ஒரு கனவுதான், அது எனக்கும் ஒரு கனவாக தான் இருந்தது, அது தற்பொழுது நிறைவேறியுள்ளது. அவருக்கு எனது நன்றி" என்று தெரிவித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D