சூரரைப்போற்று படத்தை போல் செம்ம மாஸாக தயாராகும் ‘புறநானூறு’ - சூர்யாவுடன் நடிக்கும் பிரபலங்களின் பட்டியல் இதோ

By Ganesh A  |  First Published Oct 26, 2023, 4:20 PM IST

சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து சூர்யாவும், சுதா கொங்கராவும் மீண்டும் இணையும் படத்துக்கு புறநானூறு என பெயரிடப்பட்டு உள்ளது.


நடிகர் சூர்யாவும் சுதா கொங்கராவும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியானது. இது ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்துக்கு 6 தேசிய விருதுகளும் கிடைத்தது. இப்படத்துக்காக நடிகர் சூர்யா, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அவர் வாங்கிய முதல் தேசிய விருது இதுவாகும்.

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவும், சுதா கொங்கராவும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். அதன்படி சூர்யாவின் 43-வது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இப்படத்திற்கு புறநானூறு என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். இது அவர் இசையமைக்கும் 100-வது படமாகும்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளார். மேலும் மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை தமன்னாவின் காதலரும், பாலிவுட் நடிகருமான விஜய் வர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் ஜோதிகா தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rustic. Powerful. Strong🔥 in

A film by
A Musical pic.twitter.com/HF5ZpJU9Au

— 2D Entertainment (@2D_ENTPVTLTD)

வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாம். இதில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்தே இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டு... நிஜ வாழ்க்கையில் பிக்பாஸ் பேமிலியாக வாழும் தமிழ் சினிமா பிரபலங்களின் லிஸ்ட்

click me!