விவாகரத்துக்கு பின் மீண்டும் மலர்ந்த காதல்... புரபோஸல் பண்ணிய காதலனுக்கு லிப்கிஸ் அடித்து ஓகே சொன்ன அமலா பால்

By Ganesh AFirst Published Oct 26, 2023, 12:33 PM IST
Highlights

நடிகை அமலா பால் பிறந்தநாள் அன்று தனது காதலன் தனக்கு புரபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டு 2-வது திருமணம் குறித்து சூசகமாக அறிவித்துள்ளார்.

மைனா படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் அமலா பால். இதையடுத்து இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்ட அமலா பால், கடந்த 2014-ம் ஆண்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல் விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

அமலா பாலை விவாகரத்து செய்த பின்னர், இயக்குனர் ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஏ.எல்.விஜய் உடனான விவாகரத்துக்கு பின்னர் சிங்கிளாகவே இருந்து வந்த அமலாபால் தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார். அவர் தனது காதல் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த வீடியோவில் அமலா பால் தனது காதலுடன் அமர்ந்து உணவகம் ஒன்றில் உணவு அருந்திக்கொண்டிருக்க, திடீரென அங்குள்ளவர்களுடன் சேர்ந்து அவரது காதலன் ஜெகத் தேசாய் நடனமாடி அமலா பாலுக்கு அழகாக புரபோஸ் செய்தார். இதை சற்றும் எதிர்பாராத அமலா பால் ஆச்சர்யத்தில் திளைத்துப் போக, உடனே மண்டியிட்டு மோதிரத்தை கையில் மாட்டிவிட்டு புரபோஸ் செய்து அமலா பாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தேசாய்.

அதுவும் அமலாபாலின் பிறந்தநாளான இன்று இந்த புரபோஸல் வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து தேசாய் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் என்னுடைய ராணி ஓகே சொல்லிவிட்டாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் காதலே என குறிப்பிட்டு, வெட்டிங் பெல்ஸ் என்கிற ஹேஸ்டேக்கையும் போட்டுள்ளார். இதன்மூலம் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்பது சூசகமாக தெரியவந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jagat Desai (@j_desaii)

இதையும் படியுங்கள்... லியோ உடன் போட்டிபோட பயந்து ஓடிடிக்கு தாவிய புதுப்படங்கள்.. இந்த வாரம் மட்டும் இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸா?

click me!