நடிகர் விஜய் சேதுபதி - சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட ஃபர்ஸ்ட் லுக் !!

By manimegalai a  |  First Published Oct 25, 2023, 11:43 PM IST

 “பிரம்ம முகூர்த்தம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை,  தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்  ஆகியோர் வெளியிட்டனர். 
 


KV Media தயாரிப்பாளர் P செந்தில்நாதன் வழங்க, இயக்குநர் TR விஜயன் இயக்கத்தில், விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “பிரம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார்  ஆகியோர் வெளியிட்டனர். 

காமெடி ஜானரில் மாறுபட்ட திரை அனுபவமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில்  நடக்கும்  களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்களும், பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

Amitabh Bachchan: என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது..! ரஜினியின் பதிவுக்கு பதில் ட்வீட் போட்ட அமிதாப் பச்சன்!

இளம் நாயகன்  விஜய் விஷ்வா நாயகனாக  நடிக்க, அபர்ணா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், C.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, TSR, கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த படத்தை கதை, திரைக்கதை, எழுதி  இயக்கியுள்ளார் இயக்குனர் TR விஜயன், ஶ்ரீ சாஸ்தா இசையில்,  EJ.நவ்ஷாத்  இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Happy to share the FIRST LOOK of .

Congrats & team.

The 's Production No1. pic.twitter.com/LQA1JaxmMr

— VijaySethupathi (@VijaySethuOffl)

 

click me!