சிவகார்த்திகேயன் கைவிட்ட "சிங்கப்பாதை".. கையிலெடுக்கும் ஆர்.ஜே. பாலாஜி - தயாராகும் புதிய இயக்குனர்!

By Ansgar R  |  First Published Jul 11, 2023, 12:27 PM IST

பிரபல இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் அசோக் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான "எதிர்நீச்சல்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக கால் பதித்தவர் தான் பிரபல நடிகரும், பண்பலை தொகுப்பாளருமான ஆர்.ஜே பாலாஜி. அந்த படத்திற்கு பிறகு அவ்வப்போது சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு, கடந்த 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. 

அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் படங்களில் நடித்து வந்தார், கடந்த 2019ம் ஆண்டு கே.ஆர் பிரபு இயக்கத்தில் வெளியான LKG என்ற திரைப்படத்தில் நாயகனாகவும் தோன்றினார். தற்பொழுது இணை இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் இவர் நடிப்பில் "சிங்கப்பூர் சலூன்" என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Tap to resize

Latest Videos

லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு டிமிக்கி கொடுத்த ரவீந்தர்.. வழக்குப்பதிவு செய்து போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிக்கவிருந்த "சிங்கப்பாதை" என்ற படத்தில் நடிக்க, தற்போது ஆர்.ஜே பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிங்கப்பாதை என்ற திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் படமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


அட்லியிடம் தெறி, மெர்செல் மற்றும் பிகில் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் குமார் இந்த திரைப்படத்தை இயக்கவிருந்தார். ஆனால் இந்த படம் பிறகு கைவிடப்பட்ட நிலையில், தற்போது பிரபல கேஜிஆர் ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க மீண்டும் அசோக்குமார் சிங்கப்பாதை படத்தை கையில் எடுத்துள்ளார்.

பனையூர் இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜய் திடீர் மீட்டிங்... பின்னணி என்ன?

click me!