ஒரு ட்விட்டர்வாசி வக்கா, வக்கா பாடலின் ஆடியோவை, காவாலா பாடலின் விடியோவுடன் மேட்ச் செய்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திலிருந்து "காவாலா" என்ற பாடல் வெளியானது. யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் spotify என்று பல தளங்களில் தொடர்ச்சியாக இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் தமன்னா தனது காவாலா பாடலை Recreate செய்து ஆடி வெளியிட்ட வீடியோ பல கோடி லைக்ஸ் பெற்றது. பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர், இது இன்னும் ஒரு படி உச்சத்திற்கு சென்று உலக புகழ் பெற்ற பாடகி ஷகிராவின் வக்கா வக்கா பாடலோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'குஷி' படத்தில் இருந்து வெளியான ஆராத்யா பாடலின் புரோமோ!
ஒரு ட்விட்டர்வாசி வக்கா, வக்கா பாடலின் ஆடியோவை காவாலா பாடலின் விடியோவுடன் மேட்ச் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த தமன்னா உண்மையில் இந்த இணைப்பு மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறி சந்தோஷம் அடைந்துள்ளார்.
Have to admit the sync is pretty good 😉 https://t.co/3hogKqrLuz
— Tamannaah Bhatia (@tamannaahspeaks)ஜெயிலர் திரைப்படம் நெல்சன் திலீப் குமாரின் திரை வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பாலிவுட் உலகில் இருந்து ஜாக்கி ஷெராஃப், கன்னட உலகில் இருந்து சிவராஜ் குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது.
கேப்டான் விஜயகாந்துக்காக மகனின் புது முயற்சி..! ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்..!