அரசு விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் கெத்தாக வந்த ரஜினி... ஓடோடி வந்து வரவேற்ற அமைச்சர் - வைரல் வீடியோ

By Ganesh A  |  First Published Nov 1, 2022, 4:37 PM IST

கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட உள்ளதால், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்றுள்ளார் ரஜினி.


கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் . திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி மரணமடைந்தார். புனீத் ராஜ்குமாரின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

புனீத் ராஜ்குமார் நடிகராக மட்டுமின்றி சமூக நலப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இதனால் அவருக்கு மக்கள் மனதில் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு என்று சொல்லலாம். அவரை கவுரவிக்கும் விதமாக கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது இன்று வழங்கப்பட உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... Rambha Car Accident : கார் விபத்தில் சிக்கிய ரம்பா...மருத்துவமனையில் காயங்களுடன் இளைய மகள்

தனி விமானம் மூலமாக பெங்களூரு வந்த நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார்.
இன்று மாலை 4 மணியளவில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் ரஜினி கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றுள்ளார். pic.twitter.com/qospXHGGEv

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இதற்காக பெங்களூருவில் இன்று மாலை பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். 

இந்த விழாவின் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்  பெங்களூரு சென்றடைந்தார் ரஜினிகாந்த். பெங்களூரு விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேரில் வரவேற்றார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... கத்தி கூச்சல் போட்ட மகேஸ்வரி... கப்சிப்னு ஆன அசீம் - எப்டி இருந்த மனுஷன இப்படி ஆக்கிட்டாங்களே...! வைரல் புரோமோ

click me!