ட்விட்டரில் தேசிய கொடியை ப்ரொபைல் பிக்சராக வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Published : Aug 11, 2022, 11:33 AM IST
ட்விட்டரில் தேசிய கொடியை ப்ரொபைல் பிக்சராக வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளார்.   

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இவரை, ட்விட்டர் பக்கத்தில் மட்டும் சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது ரஜினிகாந்த் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைதள பக்கத்தில் தேசிய கொடியை ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்: படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் விஷால்!
 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆக உள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய பாரத பிரதமர் மோடி, அனைவரது வீட்டிலும் தேசியக்கொடி என்கிற திட்டத்தின் படி, ஆகஸ்ட் 13 முதல் 15 தேதி வரை அனைவரது வீடுகளிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

அதே போல் மக்கள் அனைவரும் தங்களுடைய WhatsApp, twitter, Instagram போன்ற சமூக வலைதள பக்கங்களில் ப்ரொபைல் பிச்சராக தேசிய கொடியை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களுடைய ப்ரொபைல் பிச்சர் ஆக, தேசிய கொடியை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்ச்சராக தேசிய கொடியை வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: Exclusive Interview: அவங்க அப்பாவால அப்படி ஆக முடியல! அந்த ஆசையை அதிதி நிறைவேற்றிட்டாங்க கார்த்தி கூறிய தகவல்!
 

நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக 'பீஸ்ட்'  பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கப்பட்ட நிலையில், விரைவில் ரஜினிகாந்த் இதில் இணைவார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். இந்த படத்தை அண்ணாத்த படத்திற்கு பின்னர் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!