சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்ற மாதவன்! குவியும் வாழ்த்து...

Published : May 29, 2023, 12:55 AM IST
சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்ற மாதவன்! குவியும் வாழ்த்து...

சுருக்கம்

நடிகரும், இயக்குனருமான மாதவன் தற்போது அபுதாபியில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில், சிறந்த இயக்குனருக்காக விருதை பெற்றுள்ளார்.  

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா அபுதாபியில் நடைபெற்றது.  இதில் கோலிவுட் பாலிவுட், திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை ஏ. ஆர் ரகுமான் நடிகர் கமலஹாசனுக்கு வழங்க அவர் பெற்றுக் கொண்டார்.  இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதை தொடர்ந்து,  இந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில், ராக்கெட்டரி படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது.

50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யா ராய் முகத்தில் இவ்வளவு சுருக்கமா? ஷாக்கிங் கிளோஸ் அப் போட்டோ!

உளவு பார்த்ததாக தவறாக முடிவு செய்து பல வருடங்கள் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யப்பட்ட  ஒரு விஞ்ஞானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சூழலை கண்முன் நிறுத்தியது  'ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்.' திரைப்படம்.  இந்த படத்தில் நம்பியாக மாதவனே நடித்திருந்தார்.  ஷாருக்கான் மற்றும் சூர்யா இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் நயன்தாரா கெட்டப்பில் பிக்பாஸ் ஜனனி!

ஆரம்பத்தில் இந்த படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்குவதாக இருந்த நிலையில், அவர் விலகியதால் மாதவனே இந்த படத்தை இயக்க முடிவு செய்தார். அதோடு மட்டும் இன்றி, இப்படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். மாதவன் சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே... அதே போல் தன்னுடைய முதல் இயக்கத்திலும் சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்து விட்டார். இப்படத்திற்காக மாதவம், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதை பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!