பாலைவனத்தில் படாதபாடுபட்ட பிருத்விராஜ்... தனிமைப்படுத்தப்பட்ட “ஆடுஜீவிதம்” படக்குழு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 23, 2020, 7:46 PM IST
Highlights

இதையடுத்து 70 நாட்களுக்கும் மேலாக பாலைவனத்தில் சிக்கித் தவித்த பிருத்விராஜ் மற்றும் ஆடுஜீவிதம் படக்குழுவினர் அனைவரும் நேற்று தனி விமானம் மூலம் கொச்சி அழைத்து வரப்பட்டனர். 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். தமிழில் கனா கண்டேன், நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்த பிருத்விராஜ் லூசிஃபர் என்ற திரைப்படத்தை இயக்கினார். மோகன் லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டளாங்கள் நடித்த அந்த திரைப்படம் நூறு கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

பிருத்விராஜ் தனது அடுத்த படமான ஆடுஜீவிதம் படத்திற்காக ஜோர்டான் நாட்டிற்கு படக்குழுவுடன் ஷூட்டிங்கு சென்றார். மொத்தம் 58 பேர் அங்குள்ள பாலைவனத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டனர். அப்போது உலகம் முழுவதும் கொரோனா பிரச்சனை தீவிரமடைய ஆரம்பித்தது. இதனால் விமான போக்குவரத்து அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் பாலைவனத்தில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக மத்திய, மாநில அரசுகளும் படக்குழுவினரை மீட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இதையும் படிங்க: “நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ”... தீயாய் தெறிக்கும் வசனங்களுடன் வெளியானது க/பெ ரணசிங்கம் டீசர்...!

இதனிடையே ஜோர்டான் அரசிடம் அனுமதி வாங்கிய படக்குழுவினர் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக பாலைவனத்தில் சிக்கித் தவித்த படக்குழுவினரை மீட்டு வரும் படி அவர்களது குடும்பத்தினர் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 70 நாட்களுக்கும் மேலாக பாலைவனத்தில் சிக்கித் தவித்த பிருத்விராஜ் மற்றும் ஆடுஜீவிதம் படக்குழுவினர் அனைவரும் நேற்று தனி விமானம் மூலம் கொச்சி அழைத்து வரப்பட்டனர். 

இதையும் படிங்க: கையில் கிளாஸ் உடன் ஹாட் பிகினி போஸ்... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா...!

இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் 7 நாட்களுக்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தலுக்கும், அதன் பின்னர் 7 நாட்கள் அவர்களது சொந்த வீடுகளிலும் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

click me!