சீரியல் நடிகை மேக்னா கணவருக்கு இரண்டாவது திருமணம்...விவாகரத்து வாங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவசரம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 23, 2020, 07:30 PM ISTUpdated : May 23, 2020, 07:40 PM IST
சீரியல் நடிகை மேக்னா கணவருக்கு இரண்டாவது திருமணம்...விவாகரத்து வாங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவசரம்...!

சுருக்கம்

தற்போது கொரோனா பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரிச்சூரில் இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்க எளிமையாக நடந்து முடிந்துள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'அவளும் நானும்' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், நடிகை மேக்னா வின்செண்ட். தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்துள்ளார்.  மலையாள நடிகையான மேக்னா, மாடலாகவும் பிரபலமானவர். அதே போல் மலையாலயாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மேக்னா, டான் டோனி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எர்ணாகுளத்தில் உள்ள புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் வைத்து இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின், சீரியல் நடிப்பதில் இருந்து விலகியே இருந்த  இவர், மீண்டும் வாய்ப்புகள் தேடி வர, சீரியல்களில் நடிக்க துவங்கினார். இவர் சீரியல் நடிக்க துவங்கியதும், கணவன் - மனைவிக்குள் ஒரு சில கருத்து வேறுபாடுகள் துளிர் விட துவங்கியது. 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

இதனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து முறையாக நீதிமன்றத்தை நாடி விவகாரத்து பெற்றுள்ளனர். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில், டோனி மறுமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வந்த போது நடிகர் விக்கிக்கும், மேக்னாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: “நாங்க இந்தியாவே இல்லைன்னு எழுதிக்கோ போ”... தீயாய் தெறிக்கும் வசனங்களுடன் வெளியானது க/பெ ரணசிங்கம் டீசர்...!

இந்த செய்தி முற்றிலும் வதந்தி என மறுத்த விக்கி, சீரியலில் சேர்ந்து நடித்தாலே காதல் மலர்ந்துவிடுமா?, தேவையில்லாமல் வதந்தி பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் முன்னரே செய்தி வெளியிட்டிருந்தது போல். மேக்னாவின் கணவனர் டான் டோனி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். கோட்டயத்தைச் சேர்ந்த டிவைன் கிளாரா என்ற பெண்ணை நேற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இதையும் படிங்க: கையில் கிளாஸ் உடன் ஹாட் பிகினி போஸ்... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா...!

தற்போது கொரோனா பிரச்சனையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரிச்சூரில் இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்க எளிமையாக நடந்து முடிந்துள்ளது. டான் டோனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரண்டாவது திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு