சசிகலாவுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு!

Published : Feb 26, 2021, 08:32 AM ISTUpdated : Feb 26, 2021, 08:40 AM IST
சசிகலாவுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு!

சுருக்கம்

சமீபத்தில் சிறையிலிருந்து தண்டனை பெற்று விடுதலையான, சசிகலாவை பிரபல நடிகர் பிரபு திடீர் என சந்தித்து பேசியுள்ளார்.  

சமீபத்தில் சிறையிலிருந்து தண்டனை பெற்று விடுதலையான, சசிகலாவை பிரபல நடிகர் பிரபு திடீர் என சந்தித்து பேசியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த 27 ஆம் தேதி விடுதலையான சசிகலா, தற்போது சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். நேற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்: காதலியுடன் செம்ம ஹாட் ரொமான்ஸ்..! மாலத்தீவை வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால்!
 

பின்னர் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர், உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.  மரியாதை நிமித்தமாகவும் சசிகலாவின் உடல்நிலை குறித்து கேட்டு அறியவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், பிரபல நடிகருமான பிரபு சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் சுதாகர் அபராத தொகையை செலுத்தாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய போது, இன்னும் அவரது தண்டனைக்காலம் முடியவில்லை என்றும், இன்னும் ஏழு மாதங்களில் அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: அர்ச்சனா வீட்டில் விசேஷம்..! ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்!
 

தொடர்ந்து பேசிய பிரபு, சசிகலாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிவதற்காகவே சந்தித்தேன்,  தற்போது அவர் நலமுடன் உள்ளார். தன்னுடைய சகோதரர் ராம்குமார் பாஜகவில் இணைந்ததற்கு தன்னுடைய வாழ்த்துக்கள் என்றும், நான் அரசியல்வாதி இல்லை என்பதை கூறி விடைபெற்றார். மேலும், பிரபல இயக்குனர் லிங்குசாமியும் சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?