அது நான் இல்லை... நம்பாதீங்க..! நயன்தாரா பட இயக்குனர் வெளியிட்ட பரபரப்பு தகவல் !

Published : Feb 25, 2021, 05:11 PM IST
அது நான் இல்லை... நம்பாதீங்க..! நயன்தாரா பட இயக்குனர் வெளியிட்ட பரபரப்பு தகவல் !

சுருக்கம்

நயன்தாரா நடித்த 'மாயா' மற்றும் டாப்ஸியின் 'கேம் ஓவர்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் அஸ்வின், தன்னுடைய பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ள வருவதாக கூறி அதற்கான ஆதாரங்களையும் தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

நயன்தாரா நடித்த 'மாயா' மற்றும் டாப்ஸியின் 'கேம் ஓவர்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் அஸ்வின், தன்னுடைய பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ள வருவதாக கூறி அதற்கான ஆதாரங்களையும் தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது, எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) என ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் நான்தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன்.

நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை கொடுத்ததாகவும், திரைப்பட வாய்ப்புக்காக ‘தவறிழைக்க’ அழைத்ததாகவும் தெரிய வருகிறது.

எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எந்தவிதமான நடிகர் - நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை. எனவே, இத்தகைய நபர்களிடம் உரையாடலை தொடங்கும் முன் அவர்கள் பின்னணி குறித்து தீர ஆராயுமாறு அனைத்து நடிகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய திரைப்படங்களுக்காக எதிர்காலத்தில் நடிகர் - நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேடுதலில் நான் ஈடுபட்டால், அவர்களை முறையாக என்னுடைய குழுவோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களோ அணுகுவார்கள். மேற்கண்ட நபர் குறித்து காவல் துறையில் புகாரளிப்பதற்காக எனது வழக்கறிஞர் குழுவிடம் நான் தொடர்பு கொண்டுள்ளேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு