
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சீ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பிங்க்'. இந்த படத்தின் ரீமேக்கில் தான் தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் நடித்தார். 2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பட்டையைக் கிளப்பியது. டாப்ஸி வேடத்தில் ஷர்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். பெண்ணுரிமை குறித்து பேசி இருந்த இந்த படம், இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு ரசிகர்களால் பாசமாக பவர் ஸ்டார் என் அழைக்கப்படும் பவன் கல்யாண் தெலுங்கு ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வக்கீல் சாப் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியானது. சில இடங்களில் தியேட்டர்களிலும் ஸ்பெஷலாக டிரெய்லரை ரிலீஸ் செய்திருந்தனர். விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கில் கூடிய பவன் கல்யாணின் ரசிகர்கள், தான் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிட்டு டிரைலரை காண முண்டியடித்த காட்சிகள் வெளியாகி வைரலானது.
அப்படிப்பட்ட முரட்டு ரசிகர்களால் தற்போது வக்கீல் சாப் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 34 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரெய்லருக்கு 18 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே கிடைத்த நிலையில், பவர் கல்யாணின் வக்கீல் சாப் அதைவிட இருமடங்கு சாதனை படைத்துள்ளது தெலுங்கு ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.