பிரபல நடிகர் காலமானார்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

Published : Apr 05, 2021, 06:36 PM IST
பிரபல நடிகர் காலமானார்..! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

சுருக்கம்

பிரபல நடிகர் சுமார் 8 மாதங்களாக, உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார்.   

பிரபல நடிகர் சுமார் 8 மாதங்களாக, உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமாகியுள்ளார். 

மலையாள எழுத்தாளரும், நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான பி.பாலசந்திரன் தனது 69 வயதில் ஏப்ரல் 5 திங்கள் இன்று காலை காலமானார்.  அவர் பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கேரளாவில் உள்ள தனது வைகோம் வீட்டில் காலமாகியுள்ளார். சுமார் 8  மாதங்களாக படுக்கையில் இருந்தவர், மூளை காய்ச்சல் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மிகவும் உடல்நிலை மோசமான நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். இவரது மறைவு மலையாள திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவரது இறுதி சடங்குகள் இன்று மாலை அவரது வைகோம் வீட்டில் நடைபெற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டா கிராமத்தில் பத்மநாப பிள்ளை மற்றும் சரஸ்வதி பாய் ஆகியோருக்கு பிப்ரவரி 2, 1952 அன்று பத்மநாபன் பாலச்சந்திரன் நாயராகப் பிறந்த இவர், மலையாள திரைப்படத் துறையில் திரைக்கதை எழுத்தாளராக அடியெடுத்து வைத்து பின்னர் நடிகராக மாறினார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார்.

கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான மம்மூட்டியின் அரசியல் திரில்லர் படத்தில் பி.பாலசந்திரன் நடித்திருந்தார். இவருக்கு ஸ்ரீலதா என்கிற மனைவி மற்றும் ஸ்ரீகாந்த் என்கிற மகன் மற்றும் பார்வதி என்கிற மகளும் உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை