பாலிவுட்டை கதறவிடும் கொரோனா..! அக்ஷய் குமார் படக்குழுவில் 45 பேருக்கு தொற்று உறுதி!

By manimegalai aFirst Published Apr 5, 2021, 2:03 PM IST
Highlights

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் கலந்து கொண்டு நடித்து வந்த 'ராம் சேது'  படக்குழுவை சேர்ந்த  45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையே அதிர வைத்துள்ளது.
 

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் கலந்து கொண்டு நடித்து வந்த 'ராம் சேது'  படக்குழுவை சேர்ந்த  45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையே அதிர வைத்துள்ளது.

இந்தியாவையே மீண்டும் கதிகலங்க வைத்துள்ளது கொரோனா.  கடந்த வருடம் மார்ச் மாதம் தன்னுடைய கொடூர முகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கிய கொரோனா பின்னர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின் சற்று குறைந்து. இதை தொடர்ந்து மீண்டும் கடந்த மாதத்திலிருந்து அதிக அளவில் பரவி வருகிறது.  குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த அக்ஷய்குமார்,  பின்னர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இவர் கடைசியாக இயக்குனர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் நடித்து வந்த 'ராம் சேது' படத்தின் படக்குழுவினர் 100  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அதில் 45 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாலிவுட் திரையுலகையே மீண்டும் கதறவிட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு, கொரோனா தொற்று உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முடிந்தவரை வெளியில் செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், வெளியில் செல்லும்போது சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதார துறையினர் மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

click me!