பாபம் செய்யாதிரு.. 'இரவின் நிழல்' பட பாடலை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

Published : Jul 06, 2022, 06:33 PM ISTUpdated : Jul 06, 2022, 06:42 PM IST
பாபம் செய்யாதிரு.. 'இரவின் நிழல்' பட பாடலை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

சுருக்கம்

பார்த்திபன் (Parthiban) இயக்கி, எழுதி, நடித்திருக்கும் 'இரவின் நிழல்' (iravin nizhal) திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'பாபம் செய்யாதிரு' என்கிற பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (lokesh kanagaraj) இன்று வெளியிட்டுள்ளார்.  

பார்த்திபன் இயக்கி, எழுதி, நடித்திருக்கும் 'இரவின் நிழல்' திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'பாபம் செய்யாதிரு' என்கிற பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பார்த்திபன் தனது முதல் படமான "புதியபாதை" முதல் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான "ஒத்த செருப்பு" வரை வித்தியாசமான கதையம்சத்தோடு, தனித்துவமான படங்களாக இயக்கி, தயாரித்து நடித்திருந்தார்.குறிப்பாக இவர் இயக்கி, தயாரித்து, நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் 2019 ற்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றது. 

மேலும் செய்திகள்: தொலைக்காட்சி நடிகை தற்கொலையை தொடர்ந்து அவரது காதலனும் தூக்கிட்டு மரணம்..!! பரபரப்பு தகவல்..!!
 

.இந்த படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய பாணியில், உலகின் முதல் NON - LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான 'இரவின் நிழல்' படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து மட்டும் இன்றி, இதனை உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார். அதில் மூன்று சர்வதேச விழாக்களில்  'இரவின் நிழல்' வெற்றிவாகை சூடியது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு  இரண்டு விருதுகளும், 'இரவின் நிழல்' படத்திற்கு ஒரு விருதும் தற்போது வரை கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வ தேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
 

இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம், ஜூலை 15 'இரவின் நிழல்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. எனவே பட புரமோஷன் பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும் படக்குழுவினர் இன்று, 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெற்றுள்ள... 'பாபம் செய்யாதிரு' என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஹரிணி இவதுரி, நிரஞ்சனா ரமணன், மற்றும் கீர்த்தனா வைத்திய நாதன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். 

மேலும் செய்திகள்: வேஷ்டி கட்டி... காலில் மெட்டி போட்டு எடக்கு மடக்கு காஸ்டியூமில் கவர்ச்சி ரகளை செய்யும் மாளவிகா மோகனன்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?