தொலைக்காட்சி நடிகை தற்கொலையை தொடர்ந்து அவரது காதலனும் தூக்கிட்டு மரணம்..!! பரபரப்பு தகவல்..!!

Published : Jul 06, 2022, 05:44 PM IST
தொலைக்காட்சி நடிகை தற்கொலையை தொடர்ந்து அவரது காதலனும் தூக்கிட்டு மரணம்..!! பரபரப்பு தகவல்..!!

சுருக்கம்

ஒடியா தொலைக்காட்சி நடிகை ரஷ்மிரேகா ஓஜாவின் மரணத்தை தொடர்ந்து, அவரது காதலனும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

ஒடியா தொலைக்காட்சி நடிகை ரஷ்மிரேகா ஓஜாவின் மரணத்தை தொடர்ந்து, அவரது காதலனும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்: நேர்மையாக வரி செலுத்துபவர் என மத்திய அரசால் கௌரவிக்கப்பட்ட அஜித் பட ஹீரோயின்!!

சமீபத்தில், பிரபல ஒடியா தொலைக்காட்சி நடிகை ரஷ்மிரேகா ஓஜா, புவனேஷ்வரில் உள்ள நயபள்ளியில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் குறித்து, அவரது தந்தை கூறுகையில்... தன்னுடைய மகள் மரணத்திற்கு காரணம் அவரது காதலன் சந்தோஷ் பத்ரா என தெரிவித்திருந்தார். எனவே நடிகையின் மரணம் குறித்து, போலீசாரும் அவரது காதலன் மற்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

இவரது மரணத்தை தொடர்ந்து, ஜூலை 6 ஆம் தேதி (இன்று) ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள, பசந்தி காலனியில் உள்ள தன்னுடைய வீட்டில் ரஷ்மிரேகா ஓஜாவின் காதலன் சந்தோஷ் பத்ரா தன்னுடைய காதலியை போலவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தார். நடிகையின் மரணம் தொடர்பாக காவல் துறையினர் சந்தோஷிடம் விசாரணை நடத்தியதாகவும், இதற்க்கு பின்னரே நேற்று இரவு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
 

இதற்கிடையில், சந்தோஷினின் தாயார் இது குறித்து கூறுகையில்... தன்னுடைய மகன் அவரது காதலி ரஷ்மிரேகாவின் மரணத்திற்குப் பிறகு 'மனநலம் பாதித்தவர் போல் காணப்பட்டதாகவும்', ஏற்கனவே அவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், நாங்கள்அவருக்கு ஆறுதல் கூறி வைத்திருந்தோம்... ஆனால் காவலர்களின் விசாரணைக்கு பின் ரஷ்மிரேகாவின் மரணம் குறித்து அவர் தொடர்ந்து கவலைப்பட்டு கொண்டே இருந்தார், கடைசியில் தன்னுடைய உயிரையே மாய்த்து கொண்டார் என கூறியுள்ளார். காதலியின் மரணத்தை தொடர்ந்து, காதலனும் அவரை போலவே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: அக்கா ரம்யாலாம் சும்மா... நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறி கவர்ச்சி காட்டிய கீர்த்தி ! குளுகுளு கிளிக்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!