சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா... எப்போ தெரியுமா?

Published : Jul 06, 2022, 01:41 PM IST
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா... எப்போ தெரியுமா?

சுருக்கம்

vendhu thanindhathu kaadu : வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடிக்க இருந்த நிலையில், சிம்பு அமெரிக்கா சென்றதன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

நடிகர் சிம்பு, சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடை கூடியதால் சினிமாவில் இருந்து விலகும் நிலைக்கு சென்ற சிம்பு, பின் தனது விடாமுயற்சியால் உடல் எடையை குறைத்து தற்போது கோலிவுட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த துவங்கி உள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... முதலில் கஜினி பட வாய்ப்பு எனக்கு தான் வந்தது... நடிக்க மறுத்தது ஏன்? - பலவருட சீக்ரெட்... ஓப்பனாக சொன்ன மாதவன்

இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சிம்புவின் தாயாக ராதிகா நடித்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனில் பழுவூர் ராணி நந்தினியாக ஐஸ்வர்யா ராய் - யாருக்கு ஜோடி தெரியுமா?

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் அவரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் உருவானது. இதன் காரணமாக வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... கமல் மகளுக்கு என்னாச்சு...! உடல்நலம் குறித்து பரவிய தகவல்... பதறிப்போய் வீடியோ மூலம் விளக்கமளித்த சுருதிஹாசன்

சமீபத்திய தகவல்படி வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆக்ஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!